மில்லியன் செலவில் கொள்வனவு செய்யப்பட்ட ஒற்றை வாழைப்பழம் : சர்ச்சையை ஏற்படுத்திய கலைப்படைப்பு!
டக்ட் டேப் வாழைப்பழ கலைப்படைப்பு ஏலத்தில் மில்லியன் கணக்கான டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
சுவரில் ஒட்டப்பட்ட வாழைப்பழம் நியூயார்க்கில் உள்ள சோதேபியில் $6.2 மில்லியனுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
சீன தொழில்முனைவோரும் கிரிப்டோகரன்சி மன்னருமான ஜஸ்டின் சன் என்பவரால் இந்த பழம் ஏலத்தில் கொள்வனவு செய்யப்பட்டது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், இந்த தனித்துவமான கலை அனுபவத்தின் ஒரு பகுதியாக நான் தனிப்பட்ட முறையில் வாழைப்பழத்தை சாப்பிடுவேன் எனத் தெரிவித்துள்ளார்.
முந்தைய நாட்களில் வெறும் 35 காசுகளுக்கு கொள்வனவு செய்யப்பட்ட இந்த வாழைப்பழம் மிகவும் விலையுயர்ந்த பழங்களில் ஒன்றாக மாறியுள்ளது. இந்த படைப்பானது மொரிசியோவின் பல படைப்புகளில் ஒன்றாகும்.
இது விமர்சகர்கள் மற்றும் எழுத்தாளர்கள் மத்தியில் சர்ச்சையைத் தூண்டியது. பலர் இது உண்மையில் கலைப்படைப்பா ? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.