சீனாவில் Shampoo வாங்கிய பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி
சீனாவின் ஹூபெய் மாநிலத்தைச் சேர்ந்த பெண், இணையத்தில் வாங்கிய Shampooவில் சுமார் 60 கரப்பான் பூச்சி முட்டைகளைக் கண்டுபிடித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
2 Shampoo போத்தல்களை வாங்க அவர் 76 யுவான் செலுத்தினார். பெண்ணின் மகன் Shampoo பயன்படுத்தியபோது அதில் கரப்பான் பூச்சி முட்டைகளைக் கண்டு அலறியதாக China Press தெரிவித்தது.
Shampoo போத்தல்கள் 2026ஆம் ஆண்டு மார்ச், மே மாதங்களில் காலாவதியாகும்.
கரப்பான் பூச்சி முட்டைகள் Shampooஇல் இருந்தது குறித்து போத்தல்களை வாங்கிய இணையத்தளத்திடம் அந்தப் பெண் புகார் கொடுத்தார்.
Shampooஇல் பூச்சிகள் இருப்பது சாத்தியமில்லை. ஆனால் அதன் நறுமணம் பூச்சிகளை ஈர்க்க வாய்ப்புள்ளது என்று உற்பத்தியாளர் அதற்குப் பதிலளித்தார்.
(Visited 10 times, 1 visits today)





