அமெரிக்காவில் திருமணமாகி ஒரு மணி நேரத்தில் மணப்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

அமெரிக்காவில் திருமணமாகி சுமார் ஒரு மணி நேரத்திலேயே ஒரு பெண் தமது கணவரை இழந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நெப்ராஸ்கா மாநிலத்தைச் சேர்ந்த டொரேஸ் டேவிஸுக்கும் ஜானி மே டென்னிஸுக்கும் சென்ற திங்கட்கிழமை திருமணமானது.
இந்த நிலையில் படங்கள் எடுப்பதற்காகப் புதுமணத் தம்பதி தேவாலயத்திலிருந்து வெளியேறியுள்ளனர். அப்போது 48 வயது டேவிஸ் திடீரென விழுந்தார்.
மருத்துவமனையில் அவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு இரத்த உறைவு ஏற்பட்டது.
திருமணமாகிக் கொஞ்ச நேரத்திலேயே கணவனை இழந்த டென்னிஸின் நிலைமையை நினைத்துப் பார்க்க முடியவில்லை என்று சிலர் கூறினர்.
அவருக்கும் தம்பதியின் பிள்ளைகளுக்கும் உதவ இணைய நிதி திரட்டு தொடங்கப்பட்டது. இதுவரை சுமார் 14,000 டொலர் நிதி திரட்டப்பட்டுள்ளது.
(Visited 12 times, 1 visits today)