அமெரிக்காவில் அடுத்தடுத்து பதிவாகிய நிலநடுக்கங்களால் பரபரப்பு!
அமெரிக்காவின் ஓரிகான் கடற்கரையில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
பசிபிக் பெருங்கடலின், கடற்கரையிலிருந்து சுமார் 180 மைல் தொலைவில், 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் உள்ள பல நகரங்களில் அதிர்ச்சி அலைகள் உணரப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து மேலும் நிலநடுக்கங்கள் ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று (16.01) காலை 3.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
மேலும் இந்த வார இறுதியில் அப்பகுதியில் மேலும் நிலநடுக்கங்கள் ஏற்பட 65 சதவீதம் வாய்ப்புள்ளதாகவும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.





