சீன இராணுவத்தின் உயர் அதிகாரி ஒருவர் பதவிநீக்கம்!
சீன இராணுவத்தின் உயர் அதிகாரியான “மியாவோ ஹுவா” பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான ஒழுக்க மீறல்கள் காரணமாக அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதன்காரணமாக அவர் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சீனாவின் சக்திவாய்ந்த மத்திய இராணுவ ஆணையத்தின் உறுப்பினரான மியாவோ மீதான குற்றச்சாட்டுகள் பற்றிய கூடுதல் விவரங்கள் வெளியிடப்படவில்லை.
ஆனால் “கடுமையான ஒழுக்க மீறல்கள்” என்பது பொதுவாக சீனாவில் உள்ள அதிகாரிகளால் ஊழலுக்கான வார்த்தையாக பயன்படுத்தப்படுகிறது.





