கனடாவாழ் இந்திய இளைஞர் ஒருவர் அதிரடியாக கைது : விசாரணைகளில் வெளிவந்த தகவல்!

கனடாவாழ் இந்திய இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிராம்ப்டனில் வசிக்கும் அர்ஷ்தீப் சிங் என்ற 22 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பீல் பிராந்திய காவல்துறையின் (பிஆர்பி) கூற்றுப்படி, சிங் பாதிக்கப்பட்டவர்களை ரைட்ஷேர் செய்வதாகக் காட்டிக் கொண்டு தனது வாகனத்தில் அழைத்துச் சென்று வன்கொடுமை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
குறித்த இளைஞரால் மூன்று பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த மூன்று சம்பவங்களுக்கும் ஒரே சந்தேக நபர்தான் காரணம் என்று PRP புலனாய்வாளர்கள் நம்புகிறார்கள்.
இதனைத் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
(Visited 12 times, 1 visits today)