பெண்ணுக்கு பாலியல் தொல்லை – பாடசாலை அதிபர் ஒருவர் கைது

பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் மொனராகலை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொம்பகஹவெல பொலிஸார் சந்தேக நபரை நேற்று (03) கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகத்திற்குரிய அதிபர் பாடசாலை சிற்றுண்டிச்சாலையில் பணிபுரியும் பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரான அதிபர் இன்று (04) மொனராகலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தொம்பகஹவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 23 times, 1 visits today)