செய்தி தமிழ்நாடு

திரையரங்கின் உணவு பண்டத்தை பூனை சாப்பிடும் காட்சி

சிவகங்கை மாவட்டம் மகர்நோன்பு திடல் அருகே இயங்கி வரும் பிரபல (சத்தியன்)திரையரங்கம்.

இந்த திரையரங்கத்தில் நேற்று காலை காட்சியின் போது அங்குள்ள உணவு ஸ்டாலில் வைக்கப்பட்டிருந்த பப்ஸை பூனை சாப்பிட்டுள்ளது.

இதனை ரசிகர் ஒருவர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட இக்காட்சி வைரலாக பரவி வருகிறது.

தகவல் அறிந்த மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் பிரபாவதி தலைமையிலான அதிகாரிகள் சம்பந்தப்பட்ட திரையரங்கில் இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தகேக்,பப்ஸ், சமோசா,கூல்டிரிங்ஸ், பாப்கான், போன்றவற்றை ஆய்வு செய்தனர்.

இதில் பல உணவுப் பொருட்கள் காலாவதியாகி இருந்ததை கண்டறிந்து அதனை பறிமுதல் செய்து உணவகத்திற்கு சீல் வைத்தனர்.

NR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!