ஒரு பாடலுக்கு 3 கோடி சம்பளம் வாங்கும் உலக நாயகன்

இந்திய சினிமாவில் தலைசிறந்த பல பின்னணி பாடகர்கள் உள்ளனர். இதில் பல முன்னணி பாடகர்கள் பலரும் ஒரு பாடலை பாடுவதற்காக ரூ. 10 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரை சம்பளம் வாங்கி வருகிறார்கள்.
ஆனால், ஒரு பாடலை பாடுவதற்காக ரூ. 3 கோடி சம்பளம் வாங்கும் பாடகரை பற்றி உங்களுக்கு தெரியுமா.
அவர் வேறு யாருமில்லை இசையமைப்பாளரும், பின்னணி பாடகருமான ஏ.ஆர். ரஹ்மான தான்.
ஆம், ரோஜா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசை புகழாக வந்த ஏ.ஆர். ரஹ்மான் தான், ஒரு பாடலை பாட ரூ. 3 கோடி சம்பளம் வாங்கி வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
30 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் பயணித்து வரும் இவர் ஒரு திரைப்படத்திற்கு முழுமையாக இசையமைக்க ரூ. 10 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
(Visited 1 times, 1 visits today)