தென் பசுபிக் பெருங்கடலின் அருகில் 7.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
தென் பசுபிக் பெருங்கடலின் அருகே உள்ள டோங்கா பகுதிக்கு அருகில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கம் 7.2 ரிக்டர் அளவில் பதிவாகியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டோங்காவின் தென்மேற்கு பகுதியில் 280 கி.மீ தொலைவில் 167.4 கி.மீ ஆழத்தில் குறித்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.
அதேபோல் அவுஸ்ரேலியாவிற்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. நிலநடுக்கங்கத்தால் ஏற்பட்ட சேதவிபரங்கள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.
இதேவேளை ஃபிஜி தீவுகளின் தொற்கு பகுதியில் 7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நிலநடுக்கம் மையம் ஆரம்பத்தில் தெரிவித்திருந்தது.