பிரான்ஸில் பார்வையாளர்கள் கண் முன்னே கடலில் விழுந்து விபத்துக்குள்ளான விமானம்!

பிரான்ஸில் நடந்த விமான கண்காட்சியில் பார்வையாளர்கள் கண்முன்னே விமானம் ஒன்று கடலில் விழுந்து நொறுங்கியது.
தெற்கு பிரான்சில் உள்ள Patrouille de France கண்காட்சியில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
தற்போது விமானியைக் கண்டுபிடிக்க மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விமானி ராணுவத்தை சேர்ந்தவர் அல்ல என்பது தெரிய வந்துள்ளது. விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 18 times, 1 visits today)