ஆசியா செய்தி

நடுவானில் வெடித்து சிதறிய வடகொரிய ராக்கெட்

தென் கொரியாவை மிரட்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இதனால் கொரியா தீபகற்பத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

இதற்கிடையே, கடந்த நவம்பரில் வடகொரியா தனது முதல் ராணுவ உளவு செயற்கைக்கோளை பூமியின் சுற்றுப்பாதைக்கு அனுப்பியது.

இதற்கு தென் கொரியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. விரைவில் 2வது உளவு செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் என்று வடகொரியா அறிவித்தது.

இந்நிலையில், வடகொரியாவின் 2-வது உளவு செயற்கைக்கோள் விண்ணில் ஏவும் முயற்சி தோல்வி அடைந்தது. உளவு செயற்கைக் கோளை ஏற்றிச்சென்ற ராக்கெட் நடுவானில் வெடித்துச் சிதறியது.

வடகொரியாவின் வடமேற்கு விண்வெளி மையத்தில் இருந்து புதிய ராக்கெட்டில் உளவு செயற்கைக்கோள் ஏவப்பட்டது.

என்ஜின் கோளாறு காரணமாக நடுவானில் ராக்கெட் வெடித்ததாக வடகொரியாவின் அதிகாரப்பூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

திரவ ஆக்சிஜன்,பெட்ரோலிய இயந்திரத்தில் வெடிப்பு ஏற்பட்டது முதல்கட்ட பரிசோதனையில் தெரியவந்ததாக தேசிய விண்வெளி தொழில்நுட்ப நிர்வாகத்தின் துணை இயக்குனர் தெரிவித்தார். இதற்கிடையே வடகொரியா ஏவிய ஏவுகணை கடலில் விழுந்ததாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

(Visited 8 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி