சீனாவில் நின்ற இடத்தில் இருந்து வானில் எழும்பும் புதிய ரக மின்சார விமானம்
சீனாவில் மின்சார விமானத்தை பொது போக்குவரத்துக்கு பயன்படுத்த சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது.
ஓடு பாதையில் ஓடி மேலே கிளம்புவதற்கு பதில் நின்ற இடத்தில் இருந்து ஹெலிகாப்டர் போல மேலே எழும்பும் வகையில் இது அமைந்துள்ளது.
பிராஸ்பெரிட்டி என பெயரிடப்பட்டுள்ள அந்த விமானத்தை ஒரு முறை சார்ஜ் செய்தால் 250 கிலோமீட்டர் தொலைவு பயணிக்கலாம் என அதை வடிவமைத்த ஆட்டோ ஃபிளைட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
5 பேர் பயணிக்கக்கூடிய இந்த சிறிய வகை மின்சார விமானத்தை கூட்ட நெரிசலான பகுதிகளில் இருந்து கூட எளிதில் புறப்பட வைக்க முடியும்.
வழக்கமான விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை விட இவற்றின் பராமரிப்பு செலவு குறைவு எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
(Visited 8 times, 1 visits today)