இலங்கை

யாழில் நாளை முதல் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்! வெளியான மகிழ்ச்சியான தகவல்

யாழ்ப்பாணத்தில் PickMe செயலி மூலம் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி (நாளை) முதல் வாடகைக்கு வாகனங்களை அமர்த்தி பிரயாணங்களை மேற்கொள்ள முடியும் என PickMe செயலியின் வடமாகாண முகவர் தவதீஸன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் PickMe செயலியின் வடமாகாண முகவர் தவதீஸன் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் பல பகுதிகளிலும் குறித்த செயலி பயன்பாட்டில் இருந்தாலும் கூட யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உத்தியோகபூர்வமாக நாளை(01) முதல் அறிமுகப்படுத்துகின்றோம்.

ஜனவரி மாத ஆரம்பத்தில் இருந்து பரிட்சார்த்த நடவடிக்கைகள் இருந்தாலும் கூட நாளை முதல் PickMe செயலியை பொதுமக்கள் பயன்படுத்த முடியும்.

முச்சக்கர வண்டி, கார் சாரதிகள் தங்கள் வாகனங்களை வாடகைக்கு அமர்த்துபவர் என்றால், குறித்த செயலி மூலம் இலவசமாக பதிவு செய்துகொள்ள முடியும்.

சாரதிகள் பதிவு செய்ய வாகனத்தின் முன் பக்கம், கரை பக்கம், உள் பக்க படம் , தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம் முன் பக்கம், பின் பக்க புகைப்படம், வாகன வரி பத்திரம், வாகன காப்புறுதி பத்திர புகைப்படம், சாரதியின் புகைப்படம் என்பவற்றை வட்ஸப் (WhatsApp) மூலம் அனுப்பலாம். பதிந்த பின் சாரதிகளுக்கு ஒரு செயலி வழங்கப்படும். அதில் உங்கள் இரகசிய குறியீட்டின் மூலம் ஒன்லைனில் இருந்தால் போதும்.பொதுமக்கள்,வாடிக்கையாளர்கள் சாரதிகளிடம் தாம் செல்லவேண்டிய இடத்தை செயலி மூலமாக முன்பதிவு செய்வார்கள்.

சாரதிகள் வாகனங்களை பதிந்துகொள்ள 0774737737, 070 374 4444 இலக்கம் மூலமும் வட்ஸப் மூலமும் தொடர்பு கொள்ள முடியும் என்றார்.

(Visited 7 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்