குடியுரிமை தொடர்பில் கனடாவில் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்!
கனடாவிற்கு வெளியே பிறந்த கனேடியர்களின் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்படும் வகையில், அனுமதிக்கும் சட்டம் மீண்டும் நடைமுறைக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் முன்னணி இணையத்தளம் ஒன்று இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.
இந்த குடியுரிமை வழங்கப்படும் சட்டத்தை வம்சாவளியின் அடிப்படையில், கனேடிய அரசாங்கம் நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு அந்நாட்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குடிவரவு அமைச்சர் மார்க் மில்லரினால் குறித்த சட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய கனேடிய பிரஜைகளின் குழந்தை வெளிநாட்டில் பிறந்தாலும், கனேடிய குடியுரிமை வழங்கப்படும் சட்டம் மாற்றி அமைக்கப்படவுள்ளது.
இதற்கமைய கனடாவில் வாழும் தமிழர்களுக்கு வெளிநாடுகளில் பிள்ளைகள் பிறந்தாலும் அவர்கள் கனேடியப் பிரஜைகளாக கருதப்படுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.