ஆசியா செய்தி

சிங்கப்பூரில் சிறுவர்களை பாதுகாப்பதற்காக அமுலாகும் புதிய நடைமுறை!

சிங்கப்பூர் பாதுகாப்பான இணையப் பழக்கவழக்கங்களை அவர்களுக்கு எடுத்துச் சொல்லவும் புதிய வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளது.

பிள்ளைகள் இணையத்தில் செலவிடும் நேரத்தைக் குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் பெற்றோருக்கான அந்த வழிகாட்டியை வெளியிட்டுள்ளது.

Digital for Life இணையத்தளத்தில் வழிகாட்டி இடம்பெற்றுள்ளது. பிள்ளைகளின் இணைய விளையாட்டு நடவடிக்கைகள் பற்றிப் பெற்றோரிடையே விழிப்புணர்வு குறைவாய் இருப்பதாகத் தொடர்பு, தகவல் அமைச்சு தெரிவித்துள்ளது.

2022 அக்டோபரிலிருந்து கடந்த ஆண்டு பிப்ரவரி வரை 800க்கும் அதிகமான இளையர்களிடமும் அவர்களின் பெற்றோரிடமும் அமைச்சு ஓர் ஆய்வு நடத்தியது.

20 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட இளையர்கள் இணையத்தில் நேரம் கழிப்பது குறித்துப் பெற்றோரிடம் பொய் சொல்வதாக ஆய்வு காட்டியது. 10 பெற்றோரில் மூவர் மட்டுமே பிள்ளைகள் யாருடன் விளையாடுகின்றனர் என்பதை முழுமையாகத் தெரிந்து வைத்திருந்தனர்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!