ஆஸ்திரேலியா மக்களின் அன்றாட வாழ்க்கையை எளிதாக்க புதிய நடைமுறை
ஆஸ்திரேலியா மக்களின் அன்றாட வாழ்க்கையை எளிதாக்குவதற்கான வழிமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசாங்கம் கூறுகிறது.
பணவீக்கம் அதிகரித்துள்ளதால் பலர் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
நிலைமையைக் குறைக்க நடவடிக்கை எடுப்பதே எதிர்பார்ப்பு என்று பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கூறுகிறார்.
அரசாங்கம் புதிய பொருளாதார திட்டத்தை தயாரித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு அரசாங்கத்தின் பாராளுமன்ற பிரதிநிதிகள் தயாராக இருப்பதாக பிரதமர் கூறுகிறார்.
ஆஸ்திரேலியா நாடாளுமன்றம் ஆறாம் திகதி மீண்டும் கூடுகிறது.
அதற்கு முன், வாழ்க்கைச் செலவைக் குறைக்கும் கொள்கை ஸ்திரப்படுத்தப்பட வேண்டும் என்று அரசாங்கம் நம்புகிறது.





