WhatsApp வீடியோ அழைப்பில் அறிமுகமாகும் புதிய அம்சம்
மெட்டாவுக்குச் சொந்தமான இன்ஸ்டண்ட் மெசேஜிங் தளமான வாட்ஸ்அப் புதிய அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளது.
அதாவது வீடியோ கால் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் பல Effects மற்றும் ஃபில்டர்ஸ் வசதிகளை கொண்டு வருகிறது.
WABetaInfo தகவல் படி, புதிய Effects மற்றும் ஃபில்டர்ஸ் அம்சங்கள் பயனர் வீடியோ கால் பேசும் போது ஸ்கிரீன் தோற்றம், நிறம் மற்றும் பேக்ரவுண்ட் மாற்றும் வகையில் கொண்டு வரப்படுகிறது.
அதோடு பேக்ரவுண்ட் எடிட்டிங் டூல் மூலம் கூகுள் மீட்டில் உள்ளது போல் பயனர் தங்களது surroundings-ஐ blur செய்யலாம் அல்லது வாட்ஸ்அப்-ல் கொடுக்கப்படும் ப்ரீசெட் பேக்ரவுண்ட் மூலம் மாற்றிக் கொள்ளலாம்.
இந்த அம்சங்கள் தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் அனைவருக்கும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
(Visited 25 times, 1 visits today)





