எத்தியோப்பியாவில் எரிபொருள் விலை உயர்வை தொடர்ந்து அரசு எடுத்துள்ள புதிய தீர்மானம்!
இந்த ஆண்டு தொடக்கத்தில் எத்தியோப்பியாவில் எரிபொருளின் விலை உயர்ந்ததால் அந்நாட்டு அரசாங்கம் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை கொள்வனவு செய்ய முடிவு செய்துள்ளது.
எரிவாயு மூலம் இயங்கும் வாகனங்களை படிப்படியாக அகற்றுவதற்கான அரசாங்கத்தின் புதிய முயற்சிகளுடன் இது இணைந்துள்ளது.
இருப்பினும் இது தொடர்பில் வாத பிரதிவாதங்கள் எழுந்துள்ளன. தலைநகரான அடிஸ் அபாபாவில் ஒழுங்கற்ற மின்சாரம் வழங்குவதில் இருந்து உதிரி பாகங்கள் பற்றாக்குறை வரை பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்வதாக முறையிடப்பட்டுள்ளது.
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உதிரி பாகங்கள் விலை உயர்ந்தவை, சில மெக்கானிக்களால் அத்தகைய கார்களை சரிசெய்ய முடிகிறது மற்றும் அத்தகைய கார்களின் மறுவிற்பனை மதிப்பு மோசமாக உள்ளது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் முறையிட்டுள்ளார்.
(Visited 1 times, 1 visits today)