செய்தி தமிழ்நாடு

காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு புதிய ஆட்சியர் பொறுப்பேற்றார்

காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஆட்சியராக இருந்த டாக்டர் மா ஆர்த்தி கடந்த 16ஆம் தேதி அனைவருக்கும் கல்வித் திட்டம் இயக்க திட்ட இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டு, புதிய மாவட்ட ஆட்சியராக நில அளவைத் துறை கூடுதல் இயக்குனராக இருந்த கலைச்செல்வி மோகன் நியமிக்கப்பட்டார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்ட கலைச்செல்வி மோகன் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்று அரசு கோப்புகளில் கையெழுத்திட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசின் நலத்திட்டங்களை சென்றடைய பாடுபடுவேன் என தெரிவித்தார்.

புதிய மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற கலைச்செல்வி மோகன் மரியாதை நிமித்தமாக பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

NR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!