ஜெர்மனியில் புதிய தடை? அதிர்ச்சியில் வெளிநாட்டவர்கள்
ஜெர்மன் நாட்டுக்கு வந்து அகதி விண்ணப்பம் செய்த பின் அவர்களுக்கு சமூக உதவி பணம் வழங்கப்பட்டு வருகின்றது.
ஜெர்மனியில் அகதி கோரிக்கை முன்வைத்து உதவி பணம் பெற்றுக்கொண்டிருப்பவர்கள் குறித்த பணத்தை தமது சொந்த நாடுகளுக்கு அனுப்ப முடியாது என்றும் அவற்றுக்கு தடை விதிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது.
இவ்வாறு சமூக அகதி பணத்தை பெறுகின்றவர்கள் தமது சொந்த நாட்டுக்கு இந்த பணத்தை அனுப்புவதை தடை செய்தல் வேண்டும் என்று ஜெர்மனியுடைய நிதி அமைச்சர் கிறிஸ்டியான் லின் அவர்கள் தெரிவித்து இருக்கின்றார்.
இந்நிலையில் FDP கட்சியுடைய தலைவரான சராதே என்பவரும் இதே கோட்பாட்டை தெரிவித்து இருக்கின்றார்.
அதாவது அகதிகளுக்கு ஜெர்மன் நாடு ஒரு வரபிரசாதமாக அமைந்துள்ளதாகவும், இதன் காரணத்தினால் இங்கே சமூக பணத்தை பெறுகின்ற காரணத்தினால் பெருமளவான அகதிகள் வருகின்றார்கள் என்று இதன் காரணத்தினால் இவர்களுக்கு வழங்கப்படுகின்ற பணத்தை இவர்கள் தமது சொந்த நாட்டுக்கு அனுப்புவதை தடை செய்ய வேண்டும் என்று கருத்தையும் பிரதிபலித்துள்ளார்.