தலையணையை பாவிக்கும் இதை நிச்சயம் கவனிக்க வேண்டும்!! இல்லையென்றால் பெரும் ஆபத்து
பெரும்பாலான மக்களுக்கு தலையணை இல்லாமல் தூங்க முடியாது. ஆனால் தலையணையைப் பயன்படுத்தும்போது சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு சிறிய கவனக்குறைவு நம் ஆரோக்கியத்தை கூட பாதிக்கும்.
தலையணை உறையில் கவனம் செலுத்துங்கள், பலர் சரியான நேரத்தில் தலையணை உறையை மாற்றுவதில் கவனம் செலுத்துவதில்லை.
ஒரே உறையை மாதக்கணக்கில் பயன்படுத்துபவர்களும் உண்டு. உறையை கழுவி பயன்படுத்தாவிட்டால், தலையணை உறை கிருமிகள் இனப்பெருக்கம் செய்யும் இடமாக மாறும்
ஒரு வாரத்திற்கு முன்பு துவைத்தாலும் கழிவறையின் இருக்கையை விட 17,000 மடங்கு பாக்டீரியாக்கள் அதில் இருப்பதாக அமெரிக்கப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
துவைக்கப்படாத தலையணைகளில் தோல் நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளன.
இறந்த சரும செல்கள், வியர்வை மற்றும் தூசி ஆகியவை இந்த பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கான நிலைமைகளை உருவாக்குகின்றன.
ஆய்வின்படி, குளியலறையின் கதவில் காணப்படும் பாக்டீரியாவை விட, தலையணை உறையில் 25,000 மடங்கு அதிகமான பாக்டீரியாக்கள் உள்ளன.
நிமோனியாவைக் கூட ஏற்படுத்தக்கூடிய பாக்டீரியாக்கள் மற்றும் உணவு விஷத்தை ஏற்படுத்தும் பேசிலஸ் பாக்டீரியாக்கள் ஆகியவை தலையணை உறைகளில் கண்டறியப்பட்டுள்ளன.
எனவே படுக்கை விரிப்பு மற்றும் தலையணை உறையை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை கழுவ வேண்டியது அவசியம்.
தூங்கும் போது வியர்வை சிந்துபவர்கள், தலைமுடியில் எண்ணெய் தடவி தூங்குபவர்கள், மேக்கப் போடுபவர்கள் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தலையணை உறைகளை கழுவ வேண்டும்.
கழுவும் போது வெதுவெதுப்பான நீர் மற்றும் ஒரு நல்ல சவர்க்காரம் பயன்படுத்த வேண்டும்