அமெரிக்காவில் இருந்து அர்ஜென்டீனா கொண்டுவரப்பட்ட கொலைகார விமானம்..
அர்ஜென்டீனாவில் ராணுவ ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களை உயிரோடு கடலில் வீசுவதற்காக பயன்படுத்தப்பட்ட விமானம் அமெரிக்காவிலிருந்து அர்ஜென்டீனாவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
1976ம் ஆண்டு முதல் 1983ம் ஆண்டு வரை அந்நாட்டில் ராணுவ ஆட்சி நடைபெற்றது.
ராணுவத்தை விமர்சித்ததால் கைது செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கானோர்(30,000) கடும் சித்தரவதைக்கு உள்ளாக்கப்பட்டு பின் விமானத்திலிருந்து கடலில் வீசி கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
கொலைகார விமானம் என அழைக்கப்பட்ட அந்த விமானம் அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, உயிரிழந்தவர்களின் உறவினர்களின் கோரிக்கைக்கு ஏற்ப அர்ஜென்டீனாவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது .
உயிரிழந்தவர்களின் நியாகத்தை நினைவு கூறும் வகையில் புயனோஸ் ஐரெஸில் உள்ள அருங்காட்சியகத்தில் அந்த விமானம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
(Visited 5 times, 1 visits today)