இலங்கையில் ஒரே கருவில் நான்கு குழந்தைகளை பிரசவித்த தாய்
ஒரே கருவில் இருந்து நான்கு குழந்தைகள் பிறந்த சம்பவம் ஒன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பதிவாகியுள்ளது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வரலாற்றில் இவ்வாறானதொரு சம்பவம் பதிவாகியிருப்பது இதுவே முதல் தடவையாகும்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் கலா ரஞ்சனி இதனை தெரிவித்தார்.
மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணவேணி என்ற 25 வயதுடைய தாயே மூன்று பெண் குழந்தைகளையும் ஒரு ஆண் குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார்.





