தென் கொரியாவில் இசை நிகழ்ச்சி நடத்தும் இயந்திர மனிதக் கருவி

தென் கொரிய தேசிய இசைக் குழுவை EveR 6 – இயந்திர மனிதக் கருவி முதன்முறை வழிநடத்தியுள்ளது.
நேரடி இசை நிகழ்ச்சியில் கைகளை அசைத்துக் கலைஞர்கள் வாசிக்க வழிகாட்டுகிறது அந்த இயந்திர மனிதக் கருவியாகும். மாலை நிகழ்ச்சியில் 5 இசைத் துணுக்குகள். அவற்றுள் மூன்றை வழிநடத்துகிறது அந்தக் கருவியாகும்.
சிற்சில குறைகள் இருந்தாலும் தலைமை இசைக் கலைஞர் மெச்சத்தக்க பங்களிப்பு என குறிப்பிட்டுள்ளார். குறித்த நேரத்தில் இசைக் குழு உடனடியாகத் தயாராகி இணைந்து செயல்படக் கொஞ்சம் அவகாசம் வேண்டும் என குறிப்பிடப்படுகின்றது.
மனிதர்களைப் போல் இசை நிகழ்ச்சி நடத்த இயந்திரக் கருவிகள் முழுமையாகத் தயாராகவில்லை என ரசிகர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
(Visited 24 times, 1 visits today)