நேட்டோ நட்பு நாடுகளின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் கட்டும் தளத்தில் பாரிய தீ விபத்து!
இங்கிலாந்து கம்பிரியாவில் உள்ள அணு ஆயுதம் தாங்கிய நீர் மூழ்கி கப்பல் கட்டும் தளத்தில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் புகையை சுவாசித்ததாக சந்தேகிக்கப்படும் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் கப்பல் கட்டும் தளத்தில் பற்றி எரிந்த தீயை அணைந்தனர். படுகாயமடைந்த 2 பேரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த தீ விபத்தில் அணு கசிவு எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“அணுசக்தி ஆபத்து இல்லை” என்றும் போலீசார் தெரிவித்தனர்.
BAE சிஸ்டம்ஸ் தற்போது முதல் இரண்டு Dreadnought-class அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கி வருகிறது,





