பாரிஸில் வீதியில் சென்ற இளைஞனுக்கு மர்ம நபரால் நேர்ந்த கதி
பாரிஸில் வீதி ஒன்றில் வைத்து ஒருவர் கத்தியால் தாக்கப்பட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை பகல் 2.30 மணி அளவில் avenue Brunetière வீதியில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
24 வயதுடைய ஒருவரை வழிமறித்த இருவர், அவரை கத்தியால் குத்தியுள்ளனர்.
அடி வயிற்றிலும், முதுகிலும் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
படுகாயமடைந்த குறித்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலாளிகள் இருவரும் தேடப்பட்டு வருகின்றனர்.
(Visited 30 times, 1 visits today)





