போயிங் MH370 விமானம் தீப்பிடித்து எரிவதை நேரில் பார்த்ததாக கூறும் நபர்!
போயிங் 777, MH370 விமானம் மாயமானது தொடர்பான மர்மம் நீடித்து வருகின்ற நிலையில், அவ் விமானம் எரிவதை நேரில் கண்டதாக நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்கிற்குப் பயணித்தபோது மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் மாயமானது. விமானத்தை கண்டுப்பிடிப்பது சவலாகவே உள்ளது. விபத்துக்குள்ளானமைக்கான சான்றுகள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.
இந்நிலையில் நியூசிலாந்து எண்ணெய் சுரங்கத் தொழிலாளி மைக் மெக்கே (Mike McKay) என்பவர், வியட்நாமின் கடற்கரையில் உள்ள சோங்கா மெர்கூர் எண்ணெய் சுரங்கத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது அவ் விமானம் தீப்பிடித்து எரிவதை கண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
பல நாட்களுக்கு முன்பு மலேசிய மற்றும் வியட்நாமிய அதிகாரிகளைத் தொடர்பு கொள்ள முயற்சித்தேன். ஆனால் செய்தி கிடைத்ததா என்று எனக்குத் தெரியவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மெக்கேயினின் அறிவிப்பை தொடர்ந்து வியட்நாமிய அதிகாரிகள் விமானத்தை தேட குழுக்களை அனுப்பியதாக கூறப்படுகிறது. இருப்பினும் எவ்வித தடையங்களும் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.





