உலகம்

உலக உணவுப் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல்

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் எதிர்வரும் ஜூன் மாதம் வரை நீடிக்குமானால், உலகளவில் மேலும் 45 மில்லியன் மக்கள் கடும் பசி மற்றும் பட்டினிக்கு முகம் கொடுக்க நேரிடும் என உலக உணவுத் திட்டம் எச்சரித்துள்ளது.

தற்போது உலகளவில் 319 மில்லியன் மக்கள் கடும் பசி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் பிரதி நிறைவேற்றுப் பணிப்பாளர் Carl Skau தெரிவித்துள்ளார்.

இதுவே இதுவரை பதிவான மிக உயர்ந்த எண்ணிக்கை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய கிழக்கில் போர்  பதற்றம் நீடிக்குமானால், மேலும் 45 மில்லியன் மக்கள் கடும் பசி மற்றும் பட்டினிக்கு முகம் கொடுக்க நேரிடும் என Carl Skau குறிப்பிட்டுள்ளார்.

 

Mahi

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!