இன்றைய முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

சற்று ஏமாற்றமடைந்தேன் – மஸ்க் வருத்தம் தெரிவித்ததற்கு பதிலளித்த ட்ரம்ப்

எலான் மஸ்க் வருத்தம் தெரிவித்திருப்பது நன்று, அவர் மீது நான் எந்தக் குறையும் சொல்லப்போவதில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஆனால் நான் சற்று ஏமாற்றமடைந்தேன் என அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சரியாக ஒருவார காலத்துக்கு முன் பரஸ்பரம் விமர்சனங்களைத் தெறிக்கவிட்ட ட்ரம்ப் – மஸ்க் தற்போது ஆவேசம் தனிந்த கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

ஏற்கெனவே ட்ரம்ப் – மஸ்க் மோதலில் வார்த்தைகள் தடித்தபோது, குழந்தைகள் மோதலைப் போல் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், ஒரே வாரத்தில் இருவரும் சமரச பாதைக்கு திரும்பியதும் பகடிக்குள்ளாகி இருக்கிறது. ‘ஒரு வல்லரசின் அதிபரும், ஒரு பெரும் பணக்காரரும் கேலிக்கூத்து செய்கின்றனர்’ என்று நெட்டிசன்கள் நகையாடி வருகின்றனர்.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகத்தில் அரசு செலவுகளை குறைக்கும் செயல்திறன் துறையை (டிஓஜிஇ – DOGE) தொழிலதிபர் எலான் மஸ்க் கவனித்து வந்தார்.

ஆனால், அவரது துறையின் பரிந்துரைகள் அமெரிக்க அரசின் பட்ஜெட் மசோதாவில் இடம்பெறவில்லை. மாறாக அதில் வரிச்சலுகைகள், அமெரிக்க ராணுவத்துக்கு கூடுதல் நிதி, மின் வாகனங்களுக்கான மானியம் ரத்து போன்றவை இடம் பெற்றிருந்தது. இதனால் ஏமாற்றம் அடைந்த எலான் மஸ்க் அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து வெளியேறினார்.

 

(Visited 6 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!