ராணி இரண்டாம் எலிசபெத் சிறுவயதில் எழுதிய கடிதம் ஏலத்தில் விற்பனை!
பிரித்தானியாவின் மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத், சுமார் 10 வயதாக இருந்தபோது எழுதிய குழந்தைப் பருவக் கடிதம், ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கென்ட்டில் நடந்த ஏலத்தில் அக்கடிதம் £25,000க்கு விற்பனை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1936 மற்றும் 1940 க்கு இடையில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் குறித்த கடிதம் விண்ட்சரில் (Windsor) உள்ள ராயல் லாட்ஜில் (Royal Lodge) தலைமை வீட்டுப் பணிப்பெண்ணாக இருந்த பீட்ரைஸ் ஸ்டில்மேனுக்கு ( Beatrice Stillman) அனுப்பப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில் அவர் பறவைகள் மற்றும் தங்கமீன்களின் நலனைப் பற்றி விசாரித்துள்ளார். அத்துடன் தேர்ந்தெடுத்த ப்ரிம்ரோஸ்களை (primroses) ஊழியர்களிடையே பகிர்ந்து கொள்ளுமாறு கோரியுள்ளார்.
கடிதத்தின் வரலாற்று வசீகரத்தையும், எதிர்கால ராணியின் ஆரம்பகால குணாதிசயத்தை குறிப்பதாகவும் ஏலதாரர்கள் தெரிவித்துள்ளனர்.





