ஆப்கானிஸ்தானில் அதிகாலையில் இடம்பெற்ற கோர விபத்து – 25 பேர் பலி!

ஆப்கானிஸ்தான் தலைநகரில் இன்று (27.08) அதிகாலை பயணிகள் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டதாக தலிபான் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
காபூலின் அர்காண்டி பகுதியில் இவ் கோர விபத்து இடம்பெற்றுள்ளது. தெற்கு ஆப்கானிஸ்தானிலிருந்து ஹெல்மண்ட் மற்றும் காந்தஹாரிலிருந்து பயணிகளுடன் பேருந்து வந்து கொண்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதால் விபத்து நேரிட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனால் 27 பேர் காயமடைந்தனர் என்று உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அப்துல் மதீன் கானி தெரிவித்தார்.
விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
(Visited 1 times, 1 visits today)