ஐரோப்பா

பிரித்தானியாவின் யோர்க்சையர் ஆற்றில் விழுந்த கனரக வாகனம் : மூவர் பலி!

யோர்க்சையர் ஆற்றில்  வாகனம் ஒன்று குடைசாய்ந்ததில், 03 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து நேற்று (28.12) மதியம் இடம்பெற்றதாக காவல்துறை அறிவித்துள்ளது.

நார்த் யார்க் மூர்ஸில் உள்ள கிளாஸ்டேல் அருகே யோர்க்சையர் ஆற்றில் இருந்து வாகனத்தை மீட்டதாகவும், மூன்றுபேர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், பிறிதொருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.

உறவினர்களுக்கு தற்போது தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது, மேலும் தகவல்கள் உரிய நேரத்தில் வெளியிடப்படும் என்று நார்த் யார்க்ஷயர் காவல்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கெரிட் புயலின் பாதிப்புகளை இங்கிலாந்து தொடர்ந்து உணர்ந்து வருவதால், நாடு முழுவதும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!