ரணிலால் நாமல் ரத்வத்த இடையே கடும் வாக்குவாதம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவிற்கும், இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் திருமதி ஷிரந்தி ராஜபக்ஷவிற்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ரத்வத்த கொழும்பில் உள்ள நாமல் ராஜபக்சவின் வீட்டுக்கு இரவு வந்திருந்ததாகவும், அங்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் நாமலுடன் இந்த வாக்குவாதம் இடம்பெற்றதாகவும் கூறப்படுகிறது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணிலுக்கு ஒரு தரப்பாக ஆதரவளிக்க வேண்டும் என ரத்வத்த கடுமையாக கூறியதாகவும் அதற்கு எதிராக நாமல் வாதங்களை முன்வைத்ததையடுத்து இந்த முரண்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் மிக மோசமான நெருக்கடியை சந்தித்த கட்சியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை அழைக்க முடியும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதன்படி நாமல் ராஜபக்சவின் அரசியல் எதிர்காலம் தீர்மானிக்கப்படும் என அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.