பங்களாதேஷ் மாணவர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய ஹேக்கர் குழு
பங்களாதேஷில் அமைதியின்மைக்கு மத்தியில், வங்காளதேசத்தின் பிரதமர் அலுவலகம், மத்திய வங்கி மற்றும் காவல்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் “THE R3SISTANC3” என்று அழைக்கப்படும் குழுவால் ஹேக் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று தளங்களிலும் ஒரே மாதிரியான செய்திகளில், “ஆபரேஷன் ஹன்ட் டவுன், ஸ்டோப் கில்லிங் ஸ்டூடண்ட்ஸ்” என்று சிவப்பு எழுத்துரு வண்ணத்தில் தோன்றியுள்ளது.
அந்த செய்தியில் , “எங்கள் துணிச்சலான மாணவர்களின் அமைதியான போராட்டங்கள் கொடூரமான வன்முறை மற்றும் கொலைக்கு ஆளாகியுள்ளன, அரசாங்கம் மற்றும் அதன் அரசியல் கூட்டாளிகளால் திட்டமிடப்பட்டது. இது வெறும் போராட்டம் அல்ல,இது நீதிக்காகவும், சுதந்திரத்திற்காகவும் மற்றும் ஒரு போர். எங்கள் எதிர்காலம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “ஹேக்கர்கள், OSINT புலனாய்வாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களை எங்கள் பணியில் சேருமாறு நாங்கள் அவசரமாக அழைக்கிறோம். உங்கள் திறமைகள், உங்கள் தகவல் மற்றும் தீர்க்கமான நடவடிக்கை எடுப்பதற்கு உங்கள் தைரியம் எங்களுக்கு தேவை.” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையதளத்தின் கீழே உள்ள மற்றொரு செய்தியில், “உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள். நீதிக்கான போராட்டம் தொடங்கிவிட்டது” என எச்சரிக்கப்பட்டுள்ளது.
1971 இல் பங்களாதேஷின் சுதந்திரப் போரில் போராடிய வீரர்களின் வழித்தோன்றல்களுக்கு முதலில் அரசாங்க வேலைகளில் 30 சதவிகிதம் ஒதுக்கப்பட்ட ஒதுக்கீட்டு முறையை மாற்றியமைக்க வேண்டும் என்று நீண்ட காலமாகக் கோரி வரும் மாணவர்களால் அமைதியின்மை தூண்டப்பட்டது.