நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானம் மீது துப்பாக்கி பிரயோகம்!
																																		ஹைட்டி தலைநகர் மீது பறந்த இரண்டு வணிக விமானங்கள் துப்பாக்கிச் சூட்டில் தாக்கப்பட்டுள்தாக தெரிவிக்கப்படுகிறது.
ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் விமானம் புளோரிடாவில் உள்ள ஃபோர்ட் லாடர்டேலில் இருந்து வந்த போர்ட்-ஓ-பிரின்ஸில் தரையிறங்குவதற்கு சில மீட்டர் தூரத்தில் இந்த தாக்குதலுக்கு முகம்கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சமூக ஊடகங்களில் பரவும் காட்சிகள், ஒரு விமான ஊழியர் படம்பிடித்ததாக நம்பப்படுகிறது. பின் கதவுக்கு அருகே ஒரு தோட்டா விமானத்திற்குள் நுழைந்து மேல்நிலை லாக்கர்களைத் தாக்கிய துளையைக் காட்டுகிறது.
இதனையடுத்து உடனடியாக செயற்பட்ட விமானி விமானத்தை திசை திருப்பி டொமினிகன் குடியரசில் தரையிறக்கியுள்ளார்.
Toussaint Louverture சர்வதேச விமான நிலையத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அனைத்து விமானங்களும் நிறுத்தப்பட்டதாக ஹைட்டியில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
        



                        
                            
