தென்கொரியாவிற்கு வேலைக்குச் சென்ற இலங்கை இளைஞர்கள் குழு
தென் கொரியாவில் இவ்வருடம் தொழில் வாய்ப்பைப் பெறும் முதல் குழுவாக 100 இளைஞர்கள் இன்று நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
அவர்கள் தென் கொரிய வேலைகளைப் பெற்ற 832 வது குழுவாக வெளியேறுகிறார்கள். அவர்களுக்கு தென் கொரியாவில் உற்பத்தித் துறையில் வேலை இருக்கிறது.
இலங்கை அரசாங்கத்திற்கும் தென்கொரிய அரசாங்கத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம், 2023ஆம் ஆண்டில் 6,412 இலங்கையர்களை தென்கொரியாவில் பணிக்கு அனுப்ப முடியும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராக தனது கடமைகளை ஆரம்பித்ததன் பின்னர் தென்கொரியாவில் இலங்கையர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் அமைச்சர் மனுஷ நாணயக்கார உள்ளூர் அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.