மகனுக்காக பேரக் குழந்தையை பெற்றெடுத்த பாட்டி!
அமெரிக்காவில் தனது ஓரின சேர்க்கையாளரான மகனது விந்தணுவின் மூலம், குழந்தை பெற்று கொடுத்த தாயின் செயல் அனைவரையும் நெகிழவைத்துள்ளது.
அமெரிக்காவில் நெப்ராஸ்கா பகுதியை சேர்ந்த செசிலி எலெட்ஜ் (59) என்ற பெண்ணுக்கு, மேத்யூ எலெட்ஜ் என்ற மகன் இருக்கிறார். மேத்யூ எலெட்ஜ் ஓரின செயற்கையாளராக இருந்த காரணத்தால், இலியட் டாஃபெர்ட்டி என்பவரை காதலித்து வந்துள்ளார். பின்னர் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்து, ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் இருவரும் தங்களுக்கு ஒரு குழந்தை இருந்தால், நன்றாக இருக்கும் என ஆசைப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து வாடகை தாய் முறையில், குழந்தை பெற்றுக் கொள்ள திட்டமிட்டுள்ளனர்.எனவே மருத்துவமனையை அவர்கள் அணுகும் போது இருவரும் ஆண்களாக இருப்பதால், வாடகை தாய் முறையில் நிறைய சிக்கல் இருப்பதாக மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.
இதனால் மனமுடைந்து போன இருவரும் மேத்யூவின் தாயான செசிலியிடம் நடந்ததை கூறியுள்ளனர். உடனே அவரது தாய் நான் குழந்தை பெற்று தருகிறேன் என கூறியுள்ளார்.இதனை கேட்டு அவரது மகன் சத்தமாக சிரித்துள்ளார். உங்கள் வயதில் இது எப்படி சாத்தியமாகும் என கூறியுள்ளார். ’என் ஆரோக்கியத்தின் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது, என்னால் குழந்தை பெற்று கொள்ள முடியும்’ என அவர் நம்புவதாக உறுதியளித்துள்ளார்.
பின்னர் மருத்துவர்களின் ஆலோசனை படி மகன் மேத்யூவிடம் இருந்து விந்தணு பெறப்பட்டு, அவருடைய கணவரின் சகோதரியிடமிருந்து கருமுட்டை பெறப்பட்டு, செயற்கை முறையில் கரு உருவாக்கப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து அந்த கரு செசிலியின் கருப்பைக்குள் செலுத்தப்பட்டதனை தொடர்ந்து, அவர் கர்ப்பமடைந்து தன் மகனுக்கு தற்போது ஒரு பெண் குழந்தையை, பெற்று கொடுத்துள்ளார்.
‘ஓரின சேர்க்கையாளர்களுக்கு நல்ல எதிர் காலமிருக்கிறது, எப்போதும் உலகம் புதுமையான ஒன்றை எதிர்க்க தான் செய்யும், மேலும் தன் மகன் ஓரின சேர்க்கையாளர் என்பதால் நிறைய இன்னல்களை சந்தித்துள்ளான், தற்போது எங்கள் எண்ணமெல்லாம் குழந்தையை நல்லபடியாக வளர்க்க வேண்டும் என்பது தான்’ என செசிலி பிபிசிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.