உலகம் செய்தி

1941 கோடி ரூபாய் செலவில் நடந்த பிரம்மாண்ட திருமணம்

 

சமீபத்தில் பாரிஸில் 59 மில்லியன் அமெரிக்க டொ லர்கள் (சுமார் 1941 கோடி ரூபாய்) செலவில் நடந்த திருமணம்
சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.

அமெரிக்காவின் தெற்கு புளோரிடாவில் வசிக்கும் 26 வயதான Madeleine Brockway மற்றும் அவரது காதலன் Jacob Lagron ஆகியோர் இவ்வாறு திருமணம் செய்து கொண்டதாகவும், இந்த திருமணத்திற்கு ‘நூற்றாண்டின் திருமணம்’ என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணப்பெண்ணின் தந்தை அமெரிக்காவின் முன்னணி கார் விற்பனை நிறுவனம் ஒன்றின் உரிமையாளர், மேலும் அவர் தனது மகளின் திருமணச் செலவு முழுவதையும் ஏற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த திருமண விழாவில் உலக பணக்காரர்கள், பிரபல நடிகர், நடிகைகள் கலந்து கொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த திருமண விழாவில், பாரிஸில் உள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய மாளிகையான வெர்சாய்ஸ் அரண்மனையில் ஒரு இரவு விருந்து, ஐந்து நட்சத்திர ரிசார்ட்டில் விருந்து வாரம் மற்றும் மணமகன் மற்றும் மணமகளின் நண்பர்களுக்கான ஆடம்பரமான மதிய உணவு ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.

திருமண விழாவில் பல்வேறு விலைகளில் 119 அலங்காரப் பொருட்கள் உள்ளடக்கப்பட்டதாகவும், அதன் மதிப்பு 28 முதல் 10,000 அமெரிக்க டொ லர்கள் வரை இருக்கும் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 7 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி