ஆசியா செய்தி

பாகிஸ்தானில் டிக்டாக் வீடியோவிற்காக சகோதரியை சுட்டுக்கொன்ற சிறுமி

ஒரு சோகமான சம்பவத்தில், பஞ்சாபின் குஜராத் மாவட்டத்தில் அமைந்துள்ள சராய் ஆலம்கிர் நகரில் டிக்டாக் வீடியோ தொடர்பான தகராறில் 14 வயது சிறுமி தனது சகோதரியை சுட்டுக் கொன்றார் என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

விவரங்களின்படி, சபா அப்சல் மற்றும் மரியா அப்சல் ஆகிய இரு சகோதரிகளுக்கு இடையே, பிரபல சமூக ஊடக தளத்திற்காக வீடியோ ஒன்றை படமாக்கிக் கொண்டிருந்த போது, அவர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டது.

கடுமையான வாக்குவாதத்தைத் தொடர்ந்து, 14 வயதான சபா அப்சல், தனது சகோதரியை சுட்டுக் கொன்றுள்ளார்.

சந்தேகநபரான சிறுமிக்கு எதிராக அவரது சகோதரர் சதார் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!