சீனாவை ஆட்டி படைக்க வரும் மரபணுமாற்றமடைந்த கொவிட் தொற்று!
புதிய மரபணு மாற்றப்பட்ட கோவிட் XBB சீனாவை அச்சுறுத்தி வருகிறது. வாரம்தோறும் ஆறரைக் கோடி பேர் வரை இந்த புதிய வகை தொற்றால் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
ஜூன் இறுதிக்குள் இது உச்சத்தை எட்டி சீனாவை ஆட்டிப் படைக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதற்காக சீன அரசு இப்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
புதிய வகை தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஏப்ரல் முதல் சீனா ஒமிக்ரான் மரபணு மாற்ற XBB வைரஸ் தொற்றின் பரவலை சந்தித்தது.
இம்மாத இறுதிக்குள் அது 4 கோடி பேரை பாதிக்கும் என்று கருதப்படுகிறது.
(Visited 6 times, 1 visits today)