சரக்கு ரயிலும், கால்டாக்சி வண்டியும் மோதி விபத்து!! எட்டுப் பேர் பலி
தாய்லாந்தில் சரக்கு ரயிலும், கால்டாக்சி வண்டியும் மோதியதில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்தில் உயிரிழந்தவர்களில் ஐந்து ஆண்களும் மூன்று பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த விபத்தில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் வண்டியில் இருந்து தப்பித்து உயிர் பிழைத்துள்ளார்.
அந்த வாகனம் கடவையை கடந்து சென்றிருக்கலாம் என நினைத்ததாகவும், பின்னர் சில மீட்டர் தொலைவில் ரயிலை பார்த்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
(Visited 14 times, 1 visits today)





