யாழ் அச்சுவேலி பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ

யாழ்ப்பாணம் – அச்சுவேலி வல்லை இந்து மயான களப்பு பகுதியில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.
அச்சுவேலி பகுதியில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற மரண சடங்கின் இறுதி ஊர்வலத்தின் போது இளைஞர்களினால் வீசப்பட்ட பட்டாசு வெடி புற்தரவையில் விழுந்து தீப்பற்றிக் கொண்டது.
இதனால் குறித்த பகுதியின் பெரும்பாலான பற்றைக் காடுகள் தீயில் கருகி நாசமாகின.
இது தொடர்பில் பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய பிரதேச சபை பணியாளர்கள் மூலம் தீப்பரவல் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.
(Visited 15 times, 1 visits today)