பிரித்தானியாவில் கத்திக்குத்து சம்பவத்தில் பிள்ளைகளை இழந்த பெற்றோர் விடுத்துள்ள உருக்கமான கோரிக்கை
பிரித்தானியாவில் நொட்டிங்காமில் கொல்லப்பட்ட இரு மாணவர்களின் பெற்றோர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்ட உணர்வுபூர்வமான அஞ்சலி நிகழ்வில் கண்ணீர்மல்க உரையாற்றியுள்ளனர்.
கடந்த செவ்வாய்கிழமை நொட்டிங்காமில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் இரு மாணவர்கள் உயிரிழந்ததுடன் .65வயது நபரும் உயிரிழந்தார்.
இந்த தாக்குதல்கள் தொடர்பில் 31வயது நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நொட்டிங்காம் பல்கலைகழகத்தில் நேற்று அஞ்சலி நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.
கொல்லப்பட்ட இரு மாணவர்களினதும் தந்தைமார் பெருந்துயரத்துடன் உரையாற்றியுள்ளனர்.
அங்கு இருந்த அனைவரினதும் மத்தியிலும் உரையாற்றிய ஓமலே குமாரின் தந்தை சஞ்சோய் மாணவர்கள் ஒருவரை ஒருவர் கவனித்துக்கொள்ளவேண்டும், என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கிரேசும் அவரது நண்பனும் ஒன்றாக உயிரிழந்தனர்,நீங்கள் அனைவருடனும் நண்பர்களாகயிருக்கவேண்டும்,நீங்கள் அனைவரையும் நேசிக்கவேண்டும் என அவர் உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார்.
அவள் இந்த பல்கலைகழகத்திலிருப்பதை விரும்பினால் உங்கள்அனைவரையும் நேசித்தால் அவள் உங்களை பற்றி பல கதைகளை தெரிவித்தார்,நீங்கள் அவளது வாழ்க்கையை நீங்கள் தொட்டீர்கள் எனவும் அவர்தெரிவித்துள்ளார்.
எங்கள் பிள்ளைகள் எங்களிடமிருந்து இளவயதில் பறிக்கப்பட்டுள்ளனர் -இது எவருக்கும் நடக்ககூடாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நான் எனது வார்த்தைகளை இழந்துவிட்டேன் எனது பேபிபோயை இழந்துவிட்டேன் இதனை நான் எவ்வாறு தாங்கிக்கொள்ளப்போகின்றேன் என்பது தெரியவில்லை என வெப்பரின் தந்தை டேவிட் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
நொட்டிங்காம் பல்கலைகழகத்திற்குள் இடம்பெற்ற இந்த அஞ்சலி நிகழ்வு மிகவும் உணர்ச்சிகரமானதாக காணப்பட்டுள்ளது.