ஐரோப்பா

தீவிர வலதுசாரி ஆட்சியா? பிரான்சில் இரண்டாம் சுற்று வாக்குப்பதிவு

இரண்டாம் சுற்று வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. பிரான்சின் பிரதான நிலப்பகுதி மற்றும் கோர்சிகா தீவில் நடைபெறும் இந்த வாக்குப்பதிவு இரவு 8 மணிக்கு முடிவடைகிறது.

அதன்பின்னர் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். இன்று நள்ளிரவில் முன்னிலை நிலவரம் தெரியவரும். நாளை அதிகாலையில் அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உக்ரைன் போர், உலகளாவிய ராஜதந்திர செயல்பாடுகள் மற்றும் ஐரோப்பாவின் பொருளாதார ஸ்திரத்தன்மை ஆகியவற்றில் இந்த தேர்தல் தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் அதிபர் இம்மானுவேல் மக்ரானின் எஞ்சிய மூன்று ஆண்டுகால பதவிக்காலத்தில் அவருக்கான அதிகாரத்தை குறைக்கும் என்பது கிட்டத்தட்ட உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அறுதிப்பெரும்பான்மையை RN கட்சி பெற்றுக்கொள்ளாது என இறுதிக்கட்டத்தில் வெளியான கருத்துக்கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், தற்போது 39 தொகுதிகளை கைப்பற்றியுள்ள அக்கட்சி, இன்றைய தேர்தலில் மேலும் 201 தொடக்கம் 210 வரையான இடங்களை பெற்றுக்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பான்மை பெறுவதற்கு 289 தொகுதிகளில் வெற்றி பெறவேண்டு என தெரிவிக்கப்பட்ட நிலையில், அதற்குரிய சந்தர்ப்பம் எந்த கட்சிகளுக்கும் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!