பிரான்ஸில் தீ பிடித்து எரிந்த பிரபல நிறுவனத்தின் வாகனம் : உடல் கருகி நால்வர் பலி!
பிரான்சில் டெஸ்லா வாகனம் சாலைப் பலகையில் மோதி தீப்பிடித்ததாகக் கூறப்படும் கார் விபத்தில் 4 பேர் உயிரிழந்ததாக போலீஸார் அறிவித்துள்ளனர்.
நியோர்ட் நகருக்கு அருகில் சனிக்கிழமை இரவு நடந்த விபத்தின் சரியான சூழ்நிலைகள் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் விசாரணை நடந்து வருவதாகவும் உள்ளூர் போலீஸ் செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் எரிக் ஹோராவ் கூறினார்.
தரையில் உள்ள அடையாளங்கள் மற்றும் துண்டிக்கப்பட்ட சாலை அடையாளத்தை மேற்கோள் காட்டிய பொலிஸார் சாட்சிகள் இன்மையால் விசாரணைகள் சிக்கலான நிலையில் நகர்வதாக தெரிவித்துள்ளனர்.
இந்த குற்றச்சாட்டிற்கு டெஸ்லா உடனடியாக பதிலளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.





