ஐரோப்பா செய்தி

லண்டனில் இரட்டைக் கொலை – சூட்கேஸ்களில் இருந்து மீட்கப்பட்ட உடல் பாகங்கள்

இங்கிலாந்தில் உள்ள புகழ்பெற்ற பாலம் ஒன்றின் அருகே கண்டெடுக்கப்பட்ட சூட்கேஸ்களில் மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக லண்டன் பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

விசாரணைகளின் பின்னர் கொலைக் குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொலம்பிய நாட்டைச் சேர்ந்த 34 வயதுடைய யோஸ்டின் ஆண்ட்ரெஸ் மொஸ்குவேரா என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரிஸ்டலில் உள்ள கிளிப்டன் பிரிட்ஜில் உடல் உறுப்புகளுடன் கூடிய சூட்கேஸ்கள் கண்டெடுக்கப்பட்டதுடன், சந்தேக நபரின் வீட்டில் மேலும் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆல்பர்ட் அல்போன்சோ (62) மற்றும் பால் லாங்வொர்த் (71) என்ற இரு முதியவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர் சில காலங்களுக்கு முன்னர் இருவரும் வசித்த வீட்டில் வசித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!