ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் ஒன்லைனில் கொள்வனவு செய்யப்பட்ட பொருளால் ஏற்பட்ட விபரீதம்!

பிரித்தானியாவில் 03 வயது சிறுமி ஒருவரின் தாயார்  மின்சாரத்தால் இயக்கும் சீப்பை பயன்படுத்தியமையால் தனது குழந்தைக்கு ஏற்பட்ட விபரீதம் குறித்து தெரியப்படுத்தியுள்ளார்.

நார்விச்சைச் (Norwich)  சேர்ந்த 36 வயதான ஆமி (Amy) என்ற தாயார் 04 பவுண்ட்ஸுக்கு ஒன்லைனில் ஒரு சீப்பை முன்பதிவு செய்து பெற்றுக்கொண்டுள்ளார்.

அவருடைய மூன்று வயது குழந்தை அதனை எடுத்தபோது எதிர்பாராத விதமாக அக்குழந்தையின் தலைமுடியுடன் அவ் மின்சாரத்தால் இயங்கும் இயந்திரம் சிக்கிக்கொண்டது. அதனை அகற்ற முற்பட்டபோது தலைமுடி வேருடன் பிடுங்கப்பட்டதாக தயார் தெரிவித்துள்ளார்.

பின்னர் அவர் குறித்த பொருளை கொள்வனவு செய்த நோர்போக் டிரேடிங் ஸ்டாண்டர்ட்ஸிடம் (Norfolk Trading Standards) முறைப்பாடு செய்துள்ளார். இருப்பினும் அதனை இங்கிலாந்தில் விற்பனை செய்வதை நிறுத்தியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தலைமுடி வேரோடு பிடிங்கப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவம் இடம்பெற்று ஒரு மாதத்திற்கு பிறகும் குறித்த இடத்தில் புதிய முடி வளரவில்லை எனவும் தாயார் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு கவலையடைவதாகவும், “எங்கள் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு எப்போதும் எங்கள் முன்னுரிமையாகும் எனவும் சம்பந்தப்பட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் எங்கள் வாடிக்கையாளர் சேவை குழு உதவி வழங்க குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

(Visited 10 times, 10 visits today)

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி