அடுத்த 48 நேரத்தில் இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல்

வாஷிங்டன்: அடுத்த 24 முதல் 48 மணி நேரத்தில் இஸ்ரேல் மண்ணில் ஈரான் தாக்குதல் நடத்தக்கூடும் என்று அமெரிக்க உளவுத்துறையை மேற்கோள்காட்டி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.
சிரிய தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ஈரான் துணை தூதரக கட்டிடத்தின் மீது இஸ்ரேல் ஏப்ரல் 1ம் திகதி நடத்திய வான்வழி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் தாக்குதலுக்கு தயாராகி வருகிறது.
தூதரக தாக்குதலில் ஈரானிய புரட்சிகர காவலர்களின் மூத்த தளபதிகள் முகமது ரிசா சாஹேதி மற்றும் முகமது ஹாதி ரஹிமி உட்பட ஏழு அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
இதற்கு இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்க நேரிடும் என எச்சரித்த ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, இஸ்ரேலை பழிவாங்க அந்நாடு சபதம் செய்துள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
(Visited 20 times, 1 visits today)