சிங்கப்பூர் மக்களிடம் விசேட கோரிக்கை விடுத்த இணையப் பாதுகாப்பு அமைப்பு
சிங்கப்பூரில் கைத்தொலைபேசியில் anti-virus எனும் நச்சுநிரல்களுக்கு எதிரான மென்பொருள் செயலிகளைப் பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் இணையப் பாதுகாப்பு அமைப்பு பொதுமக்களிடம் இது தொடர்பில் கேட்டுக்கொண்டுள்ளது.
Malware எனும் ஆபத்து விளைவிக்கும் மென்பொருளைப் பயன்படுத்தும் புதுவகை மோசடியிலிருந்து பாதுகாக்க அது உதவும் என குறிப்பிடப்படுகின்றது.
கைத்தொலைபேசி பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய அவ்வப்போது அதைச் சரிபார்ப்பது நல்லது என்று தகவல், தொடர்பு அமைச்சர் ஜோசஃபின் தியோ தெரிவித்துள்ளார்.
தேசிய இணையப் பாதுகாப்பு இயக்கத்தின் தொடக்க நிகழ்ச்சியில் அந்த ஆலோசனை கூறப்பட்டது.
இயக்கத்தையொட்டிய இந்த 2-நாள் சாலைக்காட்சியில் பல்வேறு இணைய மிரட்டல்களைப் பற்றி எடுத்துரைக்கும் விளையாட்டுகளை வருகையாளர்கள் விளையாடிப் பார்க்கலாம் என கூறப்படுகின்றது.
மாறிவரும் மிரட்டல்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள அனைவரும் பின்பற்றக்கூடிய சில உத்திகளை அவை கற்றுத்தரும் என அறிவிக்கப்பட்டள்ளது.